[X] Close

மாயாவதி ராஜினாமா: மாநிலங்களவையில் நடந்தது என்ன? 

Rajya-Sabha-happened-in-resignation-Mayawati

தலித் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறி மாயாவதி மாநிலங்களவையை அதிர வைத்தார். தற்போது தனது எம்.பி பதவையை ராஜினாமாவும் செய்திருக்கிறார். அவர் ராஜினாமா முடிவை எடுக்கும் அளவிற்கு மாநிலங்களவையில் நடந்தது என்ன? 


Advertisement

மாநிலங்களவையில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் மூண்ட வன்முறை தொடர்பாக பேசினார். அவருக்கு அனுமதிக்கப்பட்ட 3 நிமிடங்கள் முடிந்ததும் அடுத்த உறுப்பினரை பேச மாநிலங்களவை துணைத்தலைவர் பிஜே.குரியன் அழைப்பு விடுத்தார். இதனால் கோபம் கொண்ட மாயாவதி, தமது பேச்சை முடிக்கவில்லை. தலித் பிரச்னைகள் பற்றி பேச முடியாவிட்டால் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். பேச அனுமதி கிடைக்காததையடுத்து மாயாவதி மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்நிலையில் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளார்

இதுகுறித்து மாயாவதி கூறுகையில், ’மாநிலங்களவையில் எனது குரலை எழுப்ப முடியவில்லை. தலித்,‌ பழங்குடியினர், ‌ஆதிவாசி‌ போன்ற தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்துக்கு வருகிறேன். ஆனால், இங்கு அவர்களின் பிரச்சினையை எ‌ன்னால்‌ பேச‌மு‌டியவில்லை. அவ்வாறு இருக்கும்போது‌ எதற்காக நான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். ‌‌எனவே, எனது பதவியை ராஜினாமா செய்‌ய முடிவு எடுத்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close