[X] Close

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

விளையாட்டு

Rafael-Nadal-moved-to-next-round-in-Australian-Open-tennis

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4 ஆவது சுற்றுக்கு ஸ்பெயினின் ரபேல் நடால் தகுதிப்பெற்றார்.


Advertisement

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கேமரூன் நோர்ரியை எதிர்கொண்டார்.

image


Advertisement

இந்த ஆட்டத்தில் நடால் 7-5, 6-2, 7-5 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 14-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மேலும் 3 ஆவது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 6-3, 4-6, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் போராடி செர்பியாவின் கிராஜ்னோவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

image

சர்வதேச டென்னிசில் மெட்விடேவ் தொடர்ச்சியாக பெற்ற 17-வது வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலிய ஓபனில் மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் கிரீஸின் சிட்சிபாஸ், இத்தாலியின் பெரேட்டினி மற்றும் பாபியோ போக்னினி, நார்வேயின் காஸ்பெர் ரூட் மற்றும் அமெரிக்காவின் மெக்டொனால்டு ஆகியோரும் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close