Published : 04,Feb 2021 05:31 PM

"விவசாயிகள் போராட்டம் குறித்து பேசினோம்"-விராட் கோலி!

We-discussed-about-the-issue-Virat-Kohli-on-farmers-protest

விவசாயிகள் போராட்டம் குறித்து சக வீரர்களுடன் கலந்தாலோசித்தோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. அதற்கு முன்னதாக வீடியோ கான்பரிசங் முறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி பேசினார். அப்போது விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் "விவசாயிகள் போராட்டம் குறித்து அணியினருடனான ஆலோசனையின்போது, அவரவர் கருத்துகளை சொன்னார்கள், அதுதான் நடந்தது" என்றார்.

image

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து எழும் உலக விமர்சனங்களுக்கு எதிரான ஹேஷ்டேக்குடன் சச்சின், விராட் கோலி, ரவிசாஸ்திரி, கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ‘இந்தியா டுகெதர்’ மெசேஜை ட்விட்டரில் நேற்று பகிர்ந்தனர். மத்திய வெளியுறவு அமைச்சகம் உருவாக்கிய இரண்டு ஹேஷ்டேக்குகள் #IndiaAgainstPropaganda மற்றும் #IndiaTogether ஆகியவையாகும். இந்த ஹேஷ்டேக்குகளைப் பகிர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் விவசாயப் போராட்ட ஆதரவு விமர்சனங்களை எதிர்த்து ட்விட்டரில் பதிவு மேற்கொண்டனர்.

இது குறித்து நேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த கோலி " கருத்து வேறுபாடுகள் இருக்கும் இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்தவர்கள். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதி மற்றும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான சுமுக தீர்வை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்