Published : 22,Jan 2021 04:14 PM
“வரும் ஜூன் மாதத்திற்குள் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுத்தாக வேண்டும்” - கே.சி. வேணுகோபால்

வரும் 2021 ஜூன் மாதத்திற்குள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். அதற்கான தேர்தலை மே மாத வாக்கில் நடத்தவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை செயற்குழு நிர்வாகிகள் விரும்புவதாகவும் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மே மாதம் தலைவருக்கான தேர்தலை நடத்துவது என காங்கிரஸ் கட்சி தேர்தல் குழுவினர் தெரிவித்திருந்தனர். அதற்கு செயற்குழுவிலும் அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது. கட்சியில் நிலவும் சிக்கல்கள் குறித்து பேச சோனியா காந்தி தலைமையில் இன்று கூடிய செயற்குழுவில் கே.சி.வேணுகோபால் உட்கட்சி தேர்தல் குறித்து பேசியதாக தெரிகிறது. இந்த கூட்டம் விர்ச்சுவலாக நடைபெற்றது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அதற்கு பொறுப்பேற்று தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். தொடர்ந்து அதே ஆண்டில் ஆகஸ்ட் வாக்கில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரானார். இருப்பினும் முழுநேர தலைவர் வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது. குறிப்பாக குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உட்பட 23 தலைவர்கள் இது குறித்து சோனியா காந்திக்கு கடந்த ஆகஸ்ட்டில் கடிதம் எழுதி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Congress Working Committee has decided that there will be an elected Congress President by June 2021: KC Venugopal, Congress pic.twitter.com/JLcPjDHmB9
— ANI (@ANI) January 22, 2021
கடந்த மாதம் தனக்கு கடிதம் எழுதிய தலைவர்களுடன் சோனியா காந்தி பேச்சுவார்த்தையும் நடத்தினார்.