Published : 21,Jan 2021 04:09 PM
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளதால் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து சேலம் வரும் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க ஊர்மக்கள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக அமைக்கப்பட்ட மேடையை அகற்றுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தனர். கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில் மேடைகள் மற்றும் பந்தல்கள் அகற்றப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளதால் நடராஜன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் வெளிநாட்டிலிருந்து வருவதால் அரசு விதிமுறைகளின்படி, 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
அதேபோல் ஊர்வலமாக அவரை அழைத்துவர வேண்டாம் என்றும் ஊர்மக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.