[X] Close

அதிபராக ஜோபைடனுக்கு எதிர்ப்பு;தியேட்டர் திறப்புக்கு கட்டுப்பாடு; தொடரும் மழை; இன்னும் சில

இந்தியா

today-head-lines

தேர்தலில் வென்ற ஜோ பைடனை அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எதிர்ப்பு. நாடாளுமன்றத்திற்குள் புகுந்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டம்


Advertisement

அமெரிக்க நாடாளுமன்றத்திக்குள் புகுந்த ட்ரம்ப்பின் ஆதரவாளர்களை வெளியேற்ற துப்பாக்கிச் சூடு. குண்டுபாய்ந்த பெண் உயிரிழப்பு - நிலைமை மோசமானதால் வாஷிங்டனில் ஊரடங்கு அமல்.

அதிபர் தேர்தல் முடிவுகளை ஜோ பைடன் தரப்பு திருடிவிட்டதாக டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு. கருத்துகள் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகக்கூறி ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கம்.


Advertisement

Trump vs. Biden: Comparing policies on race, immigration, climate and more  - Los Angeles Times

திரை அரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம். மத்திய அரசின் கடிதம் குறித்து விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய தலைமுறைக்கு தகவல்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம். கைது செய்யப்பட்ட 3 பேரையும் 15 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவு.


Advertisement

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இன்றைக்குள் கருத்துக்கேட்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு. எட்டாம் தேதி வரை கருத்து கேட்குமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாக கருத்துகளை பெற முடிவு.

எந்தெந்த துறையில் ஊழல் நடந்துள்ளது என நேரில் விவாதிக்கத் தயாரா என மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால். மத்திய அரசின் மக்களுக்கு எதிரான செயல்களை தடுக்காதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி.

Rare gesture: CM, Stalin join hands on Salem steel plant- The New Indian  Express

கரூரில் காதல் பிரச்னையால் இளைஞர் கொடூரக் கொலை. 3 பேரை கைது செய்து காவல்துறை தீவிர விசாரணை.

கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை. நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்கச் செய்திட வேண்டும். கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்.

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

image

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் மழையில் போராட்டம். டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு.

சிட்னியில் தொடங்கியுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்த நிலையில் இடையூறு.


Advertisement

Advertisement
[X] Close