Published : 02,Jan 2021 02:25 PM
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சவுரவ் கங்குலி அனுமதி

பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், “ சவுரவ் கங்குலி தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) செய்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என குறிப்பிட்டுள்ளது.