இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள ’விசித்திரன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ’விசித்திரன்’. ஜோஜு ஜார்ஜ், பிரபல இயக்குநர் திலீஷ் போத்தன், ஆத்மியா நடிப்பில் வெளியான இப்படத்தை எம். பத்மகுமார் இயக்கியிருந்தார். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, அது விபத்தல்ல கொலை என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார்.
மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் குவித்த இந்தக் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் விசித்திரன் படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜ் வேடத்தில் ‘விசித்திரன்’ படத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயேன். இன்று டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார். துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான வர்மா படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!