Published : 28,Dec 2020 02:17 PM

ஐசிசி விருது : தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்ற 'ரன் மெஷின்' கோலி!

VIRAT-KOHLI-ANNOUNCED-AS-THE-BEST-ODI-PLAYER-OF-THE-DECADE-IN-INTERNATIONAL-CRICKET-BY-ICC-AND-WON-THE-ICC-AWARD

சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய  சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). கடந்த  பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ளார் இந்திய கேப்டன் கோலி.

image

வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் என்றுமே மறக்க முடியாத நினைவு பரிசை கொடுத்துள்ளது ஐசிசி. இதற்காக மும்பையில் உள்ள கல்ச்சர் ஷாப் மற்றும் ஓவிய கலைஞர் பிரதாப் சால்கேவுடன் இணைந்து இந்த விருதுகளுக்கு ஐசிசி வடிவம் கொடுத்துள்ளது.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்

இந்திய அணியின் கேப்டன் கோலி சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஐசிசி அறிவித்த கடந்த பத்து ஆண்டுகளில் கோலி 10000 ரன்களை குவித்துள்ளார். இதில் 39 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 61.83. அதோடு 112 கேட்ச்களையும் அவர் பிடித்துள்ளார்.

அதோடு கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் கோலி வென்றுள்ளார். இந்த பிரிவில் அஷ்வின், ஜோ ரூட், சங்கக்கரா, ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

The incredible Virat Kohli wins the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade ?

? Most runs in the #ICCAwards period: 20,396
? Most hundreds: 66
? Most fifties: 94
?️ Highest average among players with 70+ innings: 56.97
? 2011 @cricketworldcup champion pic.twitter.com/lw0wTNlzGi
— ICC (@ICC) December 28, 2020

சற்று முன்

எடிட்டர் சாய்ஸ்