[X] Close

டிச.29-ல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு

இந்தியா,விவசாயம்

Farmers-agree-to-sixth-round-of-talk-with-government

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29-ம் தேதி மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளது. மத்திய அரசும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதால், அன்றைய தினம் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

டிச.29-ம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த தயார் என டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளதாக ஸ்வராஜ் இந்தியா அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கப்போவதாக விவசாய அமைப்புகள் கூறியுள்ளன. இந்நிலையில், வரும் 29-ம் தேதி 6ஆம் கட்ட பேச்சுவாத்தை நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close