சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சிறைத்துறை டிஐஜி ரூபா காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றவர். கண்டிப்பான நடவடிக்கைகள் மூலம் ஏற்கெனவே மக்கள் மத்தியில் அறிமுகமானவர்.
காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதியை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்ததன் மூலம் ரூபாவின் பெயர் வெளியில் தெரியவந்தது. பெங்களூருவில் காவல் துணை ஆணையராக பணியாற்றிய காலத்தில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வமற்ற முறையில் பாதுகாப்பு வழங்கிய காவலர்களை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டவர். மாவட்ட ஆயுதப் படைப்பிரிவின் இணை ஆணையராக பணியாற்றிய காலத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு பாதுகாப்பு வழங்க அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கையையும் ரூபா மேற்கொண்டார்.
சமீபத்தில் மைசூரு குடகு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சின்ஹாவுடன் டிவிட்டரில் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டதன் மூலம் செய்திகளில் ரூபாவின் பெயர் மீண்டும் வலம் வந்தது. தனது நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ரூபா, இரண்டாயிரமாவது ஆண்டில் ஐபிஎஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சியை முடித்த அவர் மட்டுமே கர்நாடாகாவில் பணியமர்த்தப்பட்டார். துப்பாக்கி சுடுதலில் வல்லவரான அவர், ஹைதராபாத்தில் பயிற்சி பெறும்போது பல்வேறு விருதுகளை வென்றவர். சிறப்பாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான குடியரசுத் தலைவர் விருதை கடந்த 2016ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பெற்றவர். எல்லாவற்றிற்கு மேலாக பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதோடு ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதமும் பயின்றவர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி