[X] Close

சாதனையை விட இது முக்கியம்: மிதாலி

Mithali-Raj-speaks-about-her-record

’சாதனை என்பது விளையாட்டின் ஒரு பகுதி’ என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறினார்.


Advertisement

அவர் மேலும் கூறும்போது, ’இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடி வருகிறேன். சாதனைகள் விளையாட்டின் ஒரு பகுதி. அதை விட முக்கியம் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது, நான் 6 ஆயிரம் ரன்கள் குவித்ததை மகிழ்ச்சி என்று சொல்லலாம். அதே நேரத்தில் அந்தப் போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.  நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டி எங்களுக்கு வாழ்வா-சாவா போட்டி. அரைஇறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால், நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தோல்வியில் இருந்து மீண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளன. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இத்தகைய சரிவில் இருந்து எழுச்சி பெற வேண்டியது அவசியம். ஓர் ஆட்டத்தில் தோற்றதும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. பொறுப்புடன் ஆடினால் வெற்றி பெறலாம்’ என்றார்.


Advertisement

Advertisement
[X] Close