[X] Close

’ஹிப் ஹாப்’ ஆதியின் அடுத்தப்பட அறிவிப்பு

சினிமா

hip-hop-aadhi-next-movie-announcement

நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படத்தை தயாரிக்கும் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்.


Advertisement

image

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என்று பன்முகத் தளங்களில் பயணிக்கும்  ’ஹிப் ஹாப்’ ஆதி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனி ஒருவன், நேற்று இன்று நாளை, அரண்மனை 2  உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதிலிருந்து, இசையமைப்பதைக் குறைத்துக்கொண்டவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.


Advertisement

image

’நட்பே துணை’, ’நான் சிரித்தால்’ உள்ளிட்டப் படங்கள் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஆதி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு இன்று பூஜையுடன் வெளியாகி இருக்கிறது. ’அன்பறிவு’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தினை இயக்குநர் அஸ்வின் ராம் இயக்குகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அஜித்தின் ’விவேகம்’, ’விஸ்வாசம்’, தனுஷின் ’தொடரி’, ’பட்டாஸ்’, ’தனுஷ் 43’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா நடிக்கிறார். நெப்போலியன், ஊர்வசி, விதார்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

ஆதி இசையமைப்பாளராக அறிமுகமான ‘ஆம்பள’ படத்தினை சுந்தர் சிதான் இயக்கி இருந்தார். அந்த நட்பே, ஆதியின் ’மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால்’ படங்களை தயாரிக்க வைத்தது. முதன்முறையாக ஆதி ’அன்பறிவு’ படத்தின் வேறு தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கிறார் என்பதும், சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close