[X] Close

'முதல்வன் 2'-க்காக இணைவார்களா? - எதிர்பார்ப்பில் அஜித், ஷங்கர் ரசிகர்கள்!

சினிமா

speculation-on-Ajith-in-Shankar-s--Mudhalvan-2-

ஷங்கர் இயக்கத்தில் 'முதல்வன் 2' படத்தில் அஜித் இணையவுள்ளதாக உலவி வரும் தகவல், இருதரப்பு ரசிகர்களையும் எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கிறது.


Advertisement

கடந்த 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்' படம், அந்த ஆண்டில் வசூல் சாதனை செய்த படங்களில் ஒன்று. கடந்த 25 ஆண்டுகளாக இயக்குநராக இருக்கும் ஷங்கர், முக்கிய ஸ்டார்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம், அர்ஜூன் பலருடனும் பணியாற்றிவிட்டார். ஆனால், முன்னணி நடிகர்களில் இதுவரை அவர் பணியாற்றாதது அஜித்துடன் மட்டும்தான். ஒரு படத்தில் ஷங்கர் - அஜித் இருவரும் இணைய வேண்டும் என்பதே இருதரப்பு ரசிகர்கள் பலரது விருப்பம்.image

இந்நிலையில், ஷங்கர் சமீபத்தில் அஜித்தை சந்தித்ததாகவும், அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்திருப்பதாகவும் தகவல்கள் உலவுகின்றன. தற்போது நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்புகள் முடியும்வரை அஜித் காத்திருக்கச் சொன்னதாகவும் வெளியான அந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், திரைப்பட ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


Advertisement

இயக்குநர் ஷங்கர் 'இந்தியன்' 2 படத்தினை இயக்கி வந்தார். சில மாதங்களுக்குமுன் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உயிரிழப்பும் ஏற்பட்டதால் படப்பிடிப்பை ஒத்திவைத்தது படக்குழு. அதோடு, கொரோனா ஊரடங்கினாலும் தள்ளிப்போனது. இதனிடையே, கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார்.

image

'இந்தியன் 2' படத்தின் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது 'முதல்வன் 2' படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற உறுதிசெய்யப்படாத தகவல் பரவி வருகிறது.


Advertisement

ஏற்கெனவே, ஷங்கர் இயக்கத்தில் 'ஜீன்ஸ்' படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது பல்வேறு காரணங்களால் நடக்காமல் போனதால் பிரசாந்த் உள்ளே வந்தார். இந்த முறையாவது இருவரும் இணைவார்களா என்பது ஷங்கர் - அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை, உறுதி செய்யப்படாத இந்தத் தகவலின்படி, 'முதல்வன் 2'-ல் இருவரும் இணைந்தால், அது அஜித் - ஷங்கர் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Advertisement

Advertisement
[X] Close