Published : 10,Dec 2020 11:30 AM

"எனக்கான சிறந்த பிறந்தநாள் பரிசு இதுதான்!" - கமல்ஹாசனை சந்தித்த ஆர்யா நெகிழ்ச்சி!

Kamal-Haasan-praises--Sarpatta-Parambarai-

’சார்பட்டா பரம்பரை’ படத்தையொட்டிய தனது பணிகளை கமல்ஹாசன் பாராட்டியதுதான் தன்னுடைய பிறந்தநாளுக்கான சிறந்த பரிசு என்று நெகிழ்ச்சியிருக்கிறார் நடிகர் ஆர்யா. 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன், ஆர்யாவை நேரில் அழைத்து ’சார்பட்டா பரம்பரை’ படப் பணிகளைப் பாராட்டியுள்ளார். ’இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு வேறெதுவும் இருக்கமுடியாது’ என்று நெகிழ்ச்சியில் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கமலுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

image

ஆர்யா - கலையரசன் நடிப்பில் ஆர்யாவின் 30-வது படமான ’சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். குத்துச்சண்டையை மையப்படுத்திய இக்கதையில், ஆர்யாவும் கலையரசனும் உடம்பை மெருகேற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

image

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதிதான் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

image

நடிகர் ஆர்யாவுக்கு டிசம்பர் 11 ஆம் தேதி நாளை பிறந்தநாள். அவர் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ஆர்யாவை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட நடிகர் ஆர்யா “இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது.

சார்பட்டா பரம்பரை படம் குறித்த உங்கள் அன்பால் நெகிழ்ந்துவிட்டேன். என்னுடைய பணிகளை உங்களுக்கு காட்டிய இந்த நாள்தான் என் வாழ்க்கையின் சிறந்த நாள். உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. இன்னும் உங்களிடம் இருந்து நிறைய கற்றுகொண்டே வருகிறேன்” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்