Published : 09,Dec 2020 05:30 PM
டி20 பேட்டிங் தரவரிசை: கே.எல்.ராகுல், கோலி முன்னேற்றம்!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது கே.எல். ராகுல், தவான், கோலி, பாண்ட்யா, ஜடேஜா, சாஹல் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மாதிரியான வீரர்களின் அதிகப்படியான பங்களிப்பு என சொல்லலாம்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையை அறிவித்தது. இதில் இந்தியாவின் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் கோலி புள்ளிகளில் முன்னேற்றம் அடைந்து டாப் 10 இடங்களுக்குள் உள்ளனர். இதில் கே.எல். ராகுல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
நான்காவது இடைத்தில் இருந்த ராகுல் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல கோலியும் ஒன்பதாம் இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான தொடரில் ராகுல் 81 ரன்களை எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மாலனும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் உள்ளனர்.
Gains for ?? in the latest @MRFWorldwide ICC Men's T20I Batting Rankings, with Virat Kohli and KL Rahul both moving up a spot within the top ?
— ICC (@ICC) December 9, 2020
Rankings ▶️ https://t.co/H7CnAiw0YTpic.twitter.com/ktHXBMeIsC