தெலுங்கு நடிகையான அனசுயா பரத்வாஜ், மறைந்த நடிகை 'சில்க்' ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் பரவியதை அடுத்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கில் பிரபல டிவி தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறியவர் அனசுயா பரத்வாஜ். கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் ஹிட் அடித்த ’ரங்கஸ்தலம்’ படத்திற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றவர். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவர இருக்கும் ’புஷ்பா’, இருமுறை தேசிய விருது வென்ற வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ’ரங்க மார்த்தாண்டா’, சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில்கூட நடிகர் விஜய் சேதுபதியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து ’உண்மையான மக்கள் செல்வன்’ என்று இவர் பதிவிட்ட புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மறைந்த நடிகை 'சில்க்' ஸ்மிதா கண்ணாடியில் தனது முகத்தை பார்க்கும் பழைய படம் போலவே, தானும் கறுப்பு வெள்ளையில் கண்ணாடியைப் பார்க்கும் படத்தை பகிர்ந்து “புதிய தொடக்கம், கோலிவுட், தமிழ், ரெஃபரன்ஸ் சில்க் ஸ்மிதா” என்று பதிவிட்டிருந்தார்.
இதனால், சில்க் ஸ்மிதாவின் படத்தில் அனசுயா நடிக்கப்போகிறார் என்று தகவல் பரவியது. இந்திய சினிமாவில் மிகவும் புகழ்மிக்க நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘டர்ட்டி பிக்சர்’ படம் வசூல் சாதனை செய்ததோடு வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
ஆனால், சில்க் ஸ்மிதா அதிகப் படங்களில் நடித்த தமிழ், தெலுங்கு மொழிகளில் இதுவரை அவரது வாழ்க்கை வரலாற்று படம் எடுக்கவில்லை. அதனால், அனசுயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது இச்செய்தி.
I am NOT playing #SilkSmita garu in any biopic. Thank you. ? — Anasuya Bharadwaj (@anusuyakhasba) December 9, 2020
ஆனால், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று, ”நான் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு சம்மந்தமான எந்தப் படத்திலும் நடிக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்