Published : 08,Dec 2020 03:41 PM
மூன்றாவது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டி20 போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மேத்யூ வேட், ஆரோன் ஃபின்ச் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
Tails was the call and tails it is. #TeamIndia captain @imVkohli wins the toss and has opted to bowl first. We are playing the same XI as the previous game. #AUSvINDpic.twitter.com/vOM9Rtlec5
— BCCI (@BCCI) December 8, 2020
வாஷிங்டன் சுந்தர் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் ஆரோன் ஃபின்ச் டக் அவுட்டாகி வெளியேற ஃபார்மில் உள்ள ஸ்மித் களத்திற்கு வந்தார். மேத்யூ வேட்டும், ஸ்மித்தும் 65 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைக்க ஸ்மித்தை பத்தாவது ஓவரில் க்ளீன் போல்ட் செய்தார் வாஷிங்டன் சுந்தர். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் பெரிய ஷாட்களை ஆடி ரன் சேர்ப்பதில் மும்முரமாக இருந்தார். அதே நேரத்தில் அதிர்ஷ்ட அலை ஆஸ்திரேலியாவின் பக்கமாக வீசியது. அதனால் கிரீஸில் இருந்த மேக்ஸ்வெல்லுக்கு லைஃப் கிடைத்துக் கொண்டே இருந்தது. நடராஜன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்ட் செய்தார்.
At the end of the powerplay Australia are 51/1
— BCCI (@BCCI) December 8, 2020
Live - https://t.co/5obpq8o9yM#AUSvINDpic.twitter.com/3ueLOA2OgT
இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. மேக்ஸ்வெல் 54 ரன்களும், மேத்யூ வேட் 80 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங்கில் மிஸ் ஃபீல்ட் செய்து கொண்டே இருந்தனர். இந்தியாவுக்காக வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் மற்றும் நடராஜன் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.இந்திய அணி 187 ரன்களை விரட்டி வருகிறது.
Australia finish with 5-186 after their 20 overs.
— cricket.com.au (@cricketcomau) December 8, 2020
SCORECARD: https://t.co/SVToo67My2#AUSvINDpic.twitter.com/t56pIzmaDu