சென்னை | வாடிக்கையாளர் மீது தாக்குதல் நடத்திய வடமாநில ஊழியர்கள்!

சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய வடமாநில ஊழியர்கள் - வாடிக்கையாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் இளைஞர் காயமடைந்தார்.
அண்ணாசாலை
அண்ணாசாலைமுகநூல்

சென்னை அண்ணாசாலை பெரிய மசூதி எதிரே உள்ள ஒரு உணவகத்திற்கு 2 இளைஞர்கள் நேற்று சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இருக்கை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.

அவர்களை வேறு இருக்கையில் அமரச் சொல்லி வடமாநில ஊழியர்கள் தரக்குறைவான வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அண்ணாசாலை
திருச்சி: முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலரின் மகன் வெட்டிக் கொலை

அப்போது, வடமாநிலத்தவர்கள் கட்டை, கரண்டி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், வாடிக்கையாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், உணவகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com