2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக, மும்பை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ், ஹர்திக்
மும்பை இந்தியன்ஸ், ஹர்திக்ட்விட்டர்

ஐபிஎல் என்றாலே விறுவிறுப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமிருக்காது என்று ஆகிவிட்டது. இது ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கும் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. அவரை, அந்த அணியின் கேப்டனாகக்கூட மதிக்காமல் தொடர்ந்து வெறுப்பேற்றி வருகின்றனர். அதிலும் நேற்றைய போட்டியில் அவர் டக் அவுட் முறையில் வீழ்ந்தபோது, அவருக்கு எதிராக மைதானத்தில் ஒலித்த ரசிகர்களின் குரல் 129 டெசிபல் ஆக இருந்தது. மேலும், அதற்குத் தகுந்தாற்போலவே, அவருடைய செயல்பாடுகளும் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாpt web

இந்த நிலையில், ஐபிஎல்லின் 48-வது லீக் போட்டியில் நேற்று (ஏப்.30) மும்பை அணியும் லக்னோ அணியிம் மோதின. இதில் லக்னோ அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக, மும்பை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்கு, இது இரண்டாவது அபராதம் ஆகும். முதல் முறை இந்த தவறை செய்தபோது விதிப்படி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் போட்டி சம்பளத்தில் ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்த தவறு நடந்து இருப்பதால் ஐபிஎல் விதிப்படி, கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதமும், அணியில் இடம்பெற்று ஆடிய ஒவ்வொரு வீரருக்கும் போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அல்லது ரூ6 லட்சம், இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: இந்தூர்| வேட்பு மனுவை திரும்பப் பெற்ற காங். வேட்பாளர்.. பாஜகவுக்குள் உடனே ஐக்கியமாக இதுதான் காரணம்!

மும்பை இந்தியன்ஸ், ஹர்திக்
”ஹர்திக் பாண்டியாவிற்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை” - கடுமையாக விளாசிய இர்ஃபான் பதான்!

ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்க வேண்டியது கேப்டனின் பொறுப்பாகும். ஃபீல்டிங் நிறுத்துவது, நடுவரிடம் விளக்கம் கேட்பது, பந்துவீச்சாளருடன் ஆலோசிப்பது என நேரத்தை கடத்துவதை தவிர்க்கவே இந்த விதி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஓர் அணியின் கேப்டனே இதுபோன்ற நேர விரயத்தை தவிர்க்க முடியும். ஆனால், ஹர்திக் பாண்டியா அதைச் சரியாக கையாளவில்லை.

ஏற்கெனவே முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்ய நிறுத்துவது, பவுலிங்கில் பும்ராவுக்கு முன்னுரிமை அளிக்காதது என ஹர்திக் மீது விமர்சனம் இருந்துவரும் நிலையில், தற்போது அணியையே அபராதத்திற்குள் தள்ளியிருப்பது வீரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாx

கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டும் வெற்றிபெற்று 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கான்பூர்| விவாகரத்து பெற்ற மகள்.. மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை.. ஆச்சர்யப்பட்ட ஊர்.. #ViralVideo

மும்பை இந்தியன்ஸ், ஹர்திக்
ரோகித் Vs ஹர்திக்! அசிங்கப்படுவது யார்? சென்னை அணியை பார்த்தும் திருந்தாத மும்பைஅணி! யார் மீது தவறு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com