தெலங்கானா| காங்கிரஸை இழிவாகப் பேசிய கே.சி.ஆர்.. பரப்புரையில் ஈடுபட தடைவிதித்த தேர்தல் ஆணையம்!

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்ட்விட்டர்

தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக, மே மாதம் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக, கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள சிர்சில்லாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது கருத்துகள் அவதூறான வகையில் அமைந்ததாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று (மே.1) இரவு 8 மணிமுதல், அடுத்த 2 நாள்களுக்கு (48 மணி நேரம்) அவர் பிரசாரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: 127 வருட சாம்ராஜ்ஜியம்.. 2 ஆக உடைந்த godrej நிறுவனம்.. பிரிக்கப்பட்ட பங்குகள்!

சந்திரசேகர ராவ்
”பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்தார் சந்திரசேகர ராவ்” - தெலங்கானாவில் பிரதமர் மோடி பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com