கருமுட்டையை உறைய வைத்த பட்டாஸ் பட நடிகை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ!!

தனது திருமணத்திற்கு சில ஆண்டுகள் ஆகும் என்பதால், தான் தாய் ஆவதற்கு எந்த பாதகமும் ஆகாதபடி முக்கிய முடிவு ஒன்றை எடுத்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் பட்டாஸ் பட நடிகை மெஹரீன் பிர்சாடா.
Mehreen Pirzada
Mehreen Pirzadapt

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து, ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர்தான் நடிகை மெஹரீன் பிர்சாடா. நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஆதர்ச நாயகியாக மாறியிருந்தார் இவர். இப்போதைய காலத்தில், திரைத்துறையில் அடுத்தடுத்த கட்ட முன்னேற்றங்களுக்காக நடிகைகள் பலர் தங்களது திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். அப்படித்தான், தனது திரைத்துறை பயணத்தால் திருமணம் தள்ளிப்போகும் என்பதால், தாய்மையை தவறவிட்டுவிடக்கூடாது என்று முக்கிய முடிவை எடுத்துள்ளார் மெஹரீன்.

ஆம், தனது ஆரோக்கியமான கருமுட்டைகளை நவீன மருத்துவத்தின் உதவியோடு, நிபுணர்களின் அறிவுறுத்தலோடு எடுத்து அதனை உறைய வைத்துள்ளார் மெஹரீன். தனது இந்த பயணம் குறித்த அனுபவத்தை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார். அவரது பதிவில், ”2 ஆண்டுகளாக இதை செய்ய வேண்டும் என்று எனது மனதை நானே தயார்படுத்திக் கொண்டதையடுத்து, இறுதியாக அதை செய்து முடித்ததில் மகிழ்ச்சி. எனது இந்த தனிப்பட்ட விஷயத்தை பகிரலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன்.

Mehreen Pirzada
ஜூலையில் இடம் மாறுகிறது பிராட்வே பேருந்து நிலையம்

பிறகு, என்னைப்போன்று திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து இதுவரை முடிவெடுக்காத பல பெண்களின் எதிர்காலம் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பகிர்கிறேன். எதிர்காலத்தில் குழந்தை பெறுவதில் பிரச்னை இல்லாமல், சிக்கல் இல்லாமல் இருப்பதற்கு பெண்கள் அனைவரும் இதனை செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தை பற்றி பலரும் பேசுவது இல்லை. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்மால் நல்ல முடிவுகளை எடுக்க முடியாதா என்ன? தாயாக வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. சில ஆண்டுகள் தாமதமாவதால், அதனை தவறவிட நான் விரும்பவில்லை. ஊசி, ரத்தம், மருத்துவமனை போன்றவற்றை பார்த்து பயப்படும் என்னைப் போன்றவர்களுக்கு இது சற்று சவாலானதுதான். பல கட்ட போராட்டங்கள் இருந்தாலும், அவை அனைத்துக்கும் இது தகும். நீங்கள் எதையெல்லாம் தேர்வு செய்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவற்றை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mehreen Pirzada
ஒரு சிலரின் வெறுப்புப் பேச்சுக்கான காமெடி பதிலா இந்த Malayalee From India..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com