பிராட்வே பேருந்து நிலையம்
பிராட்வே பேருந்து நிலையம்முகநூல்

ஜூலையில் இடம் மாறுகிறது பிராட்வே பேருந்து நிலையம்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிக்காக தீவுத்திடலுக்கு இடமாற்றப்படுகிறது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிக்காக தீவுத்திடலுக்கு இடமாற்றப்படுகிறது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் மல்டி மாடல் இன்டகிரேஷன் என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் 823 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

தீவுத்திடலில் தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் 5 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. அதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிராட்வே புதிய பேருந்து நிலையத்திற்கு ஜுன் 4 ஆம் தேதிக்குப் பிறகு டெண்டர் விட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ஜூலையில் தீவுத் திடலுக்கு பிராட்வே பேருந்து நிலையம் இடம் மாறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிராட்வே பேருந்து நிலையம்
மேஷ ராசி டூ ரிஷப ராசி: குருபெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி குரு சன்னதியில் குவிந்துள்ள பக்தர்கள்

அந்தவகையில், தற்போது பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com