கத்திமுனையில் 9 அணிகள்; இதெல்லாம் நடந்தா RCB Playoffs செல்லும்! CSK அணிக்கு இருக்கும் ஆபத்து?

பிளே ஆஃப் செல்வதற்கான ரேஸில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்கான போட்டியானது கிட்டத்தட்ட 8 அணிகளுக்கு இடையே பரபரப்பான மோதலாக இருந்துவருகிறது.
rcb - csk - mi
rcb - csk - miPT

நடப்பு 2024 ஐபிஎல் சீசனில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் 8 முதல் 10 போட்டிகள் வரை விளையாடியுள்ள நிலையில், எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் என்ற முடிவு மட்டும் எட்டப்படாமலே இருந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு அணியை தவிர, மீதமிருக்கும் 9 அணிகளும் தங்களுடைய வாய்ப்பிற்காக கடைசிபோட்டிவரை யுத்தம் செய்யவேண்டிய இடத்தில் மட்டுமே இருந்துவருகின்றன.

9 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றிபெற்றிருக்கும் ராஜஸ்தான் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால் முதலிடத்தில் இருக்கும் RR அணிக்கும், இரண்டாவது இடத்தில் இருக்கும் KKR அணிக்கும் இடையேயான வித்தியாசம் 6 புள்ளிகளாக இருக்கிறது. அதாவது இரண்டாவது இடத்திலிருந்து 6வது இடம் வரைக்கும் இருக்கும் 5 அணிகளும், 10 புள்ளிகளுடன் சரிசமமான நிலையில்தான் இருக்கின்றன. இதனால் தான் ராஜஸ்தான் அணியை தவிர மற்ற எந்த அணிகளும் அரையிறுதி செல்வதற்கான பந்தயத்தில் முன்னிலையில் இல்லாமல் இருக்கின்றன.

RCB
RCB

அதாவது மீதமிருக்கும் 9 அணிகளும் விளையாடவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் நிச்சயம் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்துடன் இருக்கின்றன. இந்த ஒரேயொரு காரணம்தான், ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

rcb - csk - mi
இதான் ரியல் RCB.. இவ்வளவு நாளா எங்கப்பா இருந்திங்க? ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜாக்ஸ்! அசத்தல் வெற்றி!

எப்படி ஆர்சிபி அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்?

எப்படி ஆர்சிபி அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்றால், அவர்கள் மீதமிருக்கும் அனைத்து போட்டிகளிலும் நிச்சயம் வெல்ல வேண்டும். அதேநேரத்தில் மீதமிருக்கும் 4 போட்டிகளில் “குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்” நான்கு அணிகளையும் வீழ்த்தும் பட்சத்தில், அவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்கும்.

விராட் கோலி - வில் ஜாக்ஸ்
விராட் கோலி - வில் ஜாக்ஸ்

டெல்லி அணி 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், ஆர்சிபி அணி அவர்களை வீழ்த்திவிட்டாலே அந்த அணி வெளியேறும் நிலைக்கு செல்லும். அதேபோலதான் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் அவர்கள் நல்ல ரன்ரேட்டுடன் பாசிட்டாவான நிலையில் இருக்கின்றது. ஆனால் மீதமிருக்கும் போட்டிகளில் ஒன்றில் தோற்று, ஆர்சிபி அணிக்கு எதிராகவும் தோற்றால் அவர்களின் வாய்ப்பும் வாழ்வா-சாவா நிலைக்கு செல்லும்.

சிஎஸ்கே
சிஎஸ்கே

இந்த வாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறில் மும்பை அணி விளையாட போகும் 5 போட்டிகளின் முடிவும் முக்கிய பங்குவகிக்கும். அவர்கள் டாப் பட்டியலில் இருக்கும் KKR மற்றும் LSG அணிக்கு எதிராக இரண்டு-இரண்டு போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் விளையாட விருக்கிறது. லீக் சுற்றின் கடைசிபோட்டிவரை பிளே ஆஃப் செல்வதற்கான மோதல் உயிர்ப்புடன் இருப்பது, 2024 ஐபிஎல் தொடரை ஸ்பெசலாக மாற்றியுள்ளது. போகப்போக ஒவ்வொரு போட்டியும் அனல்பறக்கும் போட்டியாகவே நிச்சயம் அமையவிருக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

எல்லாவற்றையும் தாண்டி கிட்டத்தட்ட பிளே ஆஃப் செல்வதற்கு பாதிவாய்ப்பே வைத்திருக்கும் ஆர்சிபி அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகமான ரன்ரேட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிகளை கைப்பற்றவேண்டும். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

rcb - csk - mi
5-0.. சேஸிங் மறந்துபோச்சு மேடம்! சென்னையில் அஸ்தமனமான Sunrisers! வரலாறு படைத்த தோனி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com