[X] Close

குறைந்த விலையில் மிகுந்த ஊட்டம்... பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஆரோக்கியம்!

சிறப்புக் களம்,ஹெல்த் - லைஃப்ஸ்டைல்

Tips-to-eat-healthy-foods-in-Budget

ஆரோக்யமான உணவு பட்ஜெட்க்குள் இருக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? குறிப்பாக குளிர்காலம் வந்தாலே சளி, காய்ச்சல் போன்ற பலவித உடல் பிரச்னைகள் ஏற்படும். மருந்து மாத்திரைகளைவிட ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். ஆனால், நாம் ஆரோக்யம் என்று எண்ணி உணவை வாங்க நினைக்கும்போது அதன் விலை வாங்கவிடாமல் தடுத்துவிடும். உண்மையில் நாம் தினமும் சாப்பிடும் உணவுகளையே முறையாக உட்கொண்டால் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும்.


Advertisement

image

பயிறு வகைகள்


Advertisement

பயிறு வகைகளில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. மேலும், நாம் தினமும் சேர்த்துக்கொள்ளக்கூடிய மற்றும் எளிதாக வாங்கக்கூடிய உணவும்கூட. பயிறுகளில் உள்ள பாலிஃபெனோல்ஸ், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும். மேலும் பயிறுகளில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் ஆசிட் மற்றும் மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியைத் தூண்டும். மேலும் எலும்பு, இதயம் மற்றும் தசைகளை வலுப்படுத்தும்.

image


வாழைப்பழம்


Advertisement

மற்ற பழங்களைவிட எளிதாக மற்றும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு உணவு வாழைப்பழம். பலவிதமான உணவுகளில் சேர்க்கக்கூடிய வாழைப்பழம், உடனடி எனர்ஜியைத் தருவதுடன், உணவின் சுவையையும் அதிகரிக்கும். வாழைப்பழத்தில், பொட்டாசியம், நார்ச்சத்து, கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட், நியாசின், ரைபோஃப்ளாவின் மற்றும் பி6 போன்ற எண்ணற்ற சத்துகள் நிறைந்துள்ளன. இது இதயத்தை வலுப்படுத்தும் முக்கிய உணவும்கூட.

image

ஓட்ஸ்

உங்கள் வீட்டில் ஒரு ஓட்ஸ் பாக்கெட் இருந்தாலே போதும், குறைந்த விலையில் சத்துமிக்க காலை உணவை செய்துவிடலாம். நார்ச்சத்து மிகுந்த ஓட்ஸானது இதய நோய்களைத் தடுக்கும். மேலும் செரிமானத்தைத் தூண்டும். மேலும் குறைந்த அளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வைக் கொடுக்கும்.

image

கோதுமை பாஸ்தா

மற்ற பாஸ்தாவைப் போன்றுதான் கோதுமை பாஸ்தாவிலும் கலோரிகள் நிறைந்துள்ளது. ஆனால் அதுதவிர, புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களும் இதில் நிறைந்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். பாஸ்தாவை ஆரோக்யமானதாக சமைக்க, அதில் தேவையான புரதம் சேர்க்கவேண்டும். அதற்கு குறைந்த அளவில் மீன் போன்ற இறைச்சி வகைகள் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளைச் சேர்க்கலாம்.

image

தயிர்

வெறும் 100 கிராம் தயிரில் 110மி.கி கால்சியம் நிறைந்துள்ளது. கால்சியம் மட்டுமல்லாமல், அதிகப்படியான புரதமும் செறிந்துள்ளது. தயிர் சேர்த்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் தயிர் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது பலருக்கும் தெரியாது. உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் மற்றும் பொட்டாசியத்தையும் கொடுக்கிறது. எனவே தினசரி சாலட்டில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்வது ஆரோக்யத்தை மேம்படுத்தும்.

image

கீரை வகைகள்

கீரை வகைகள் உடலுக்கு எத்தனை நன்மை பயக்கக்கூடியது என்று நம் அனைவருக்கும் தெரியும். பலவித வைட்டமின்கள், மினரல்ஸ், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி ஆன்ஸிடன்டுகள் இதில் நிறைந்துள்ளது. கீரை தனியாக சாப்பிட விரும்பாதவர்கள் மற்ற உணவுகளுடன் கலந்து சேர்த்துக்கொள்ளலாம்.

image

முட்டை

முட்டை சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் முட்டை பிரதானமானது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கால்சியம், புரதம் நிறைந்த முட்டையை விதவிதமாக சமைத்து உண்ணலாம். இதய நோய்களைத் தடுக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த முட்டையில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மினரல்களும் நிறைந்துள்ளன. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

image

பட்டாணி
பட்டாணியில் புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பட்டாணிக்கு அதிக விலை கொடுக்கத் தேவையில்லை. அதேசமயம், மொத்தமாக வாங்கி ஃப்ரீசரில்கூட வைத்துக்கொள்ளலாம்.


Advertisement

Advertisement
[X] Close