Published : 11,Jul 2017 01:11 PM
ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு வேலை

தமிழக ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், முதுநிலை விளையாட்டு அலுவலர் பணிக்கான நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 2014 ஆண்டு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த ஜோஷ்னா சின்னப்பா, தமது திறனை ஊக்குவிக்கும்படி முதல்வரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின்கீழ், முதுநிலை விளையாட்டு அலுவலர் பதவிக்கு ஜோஷ்னா சின்னப்பா நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.