Published : 30,Oct 2020 12:52 PM
திருமணக் கொண்டாட்டங்கள் -புகைப்படங்களை வெளியிட்டு அசத்திய காஜல்!

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். அழகிய கண்களாலும், வசீகர சிரிப்பாலும் பலரின் மனதில் இடம்பிடித்த இவர் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படி இன்று நடிகை காஜல் அகர்வால் மற்றும் தொழிலதிபர் கௌதம் கிச்லுவுக்கு மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமண ஏற்பாடுகள் மற்றும் ஆட்டம் பாட்டங்களின் கோலாகல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் காஜல்.
Pretty Bride ???#KajalAggarwal@MsKajalAggarwal#KajGautKitched#KajalGautamWeddingOnOct30pic.twitter.com/VmaxOWLTYr
— Bheeshma Talks (@BheeshmaTalks) October 29, 2020
இன்று காலை மெஹந்தி மற்றும் ஹல்தி விழாக்களின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மஞ்சள்நிற லெஹங்காவும், பூ நகையலங்காரமும் செய்துகொண்டு தேவதைப் போன்று ஜொலிக்கிறார் காஜல். #kajgautkitched என்ற ஹேஷ்டேக் மட்டும் போட்டு பதிவிட்ட இந்த புகைப்படங்களுக்கு சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான வாழ்த்துகள் வந்து குவிந்துள்ளன.
தங்கள் பாரம்பரிய உடையில் மெஹந்தியுடன் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெறவுள்ள இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்குபெறவுள்ளனர்.