[X] Close

நாளை இன்டர்வியூ: இந்திய அணி பயிற்சியாளராகிறார் ரவி சாஸ்திரி!

Ravi-Shastri-top-contender-for-Indian-cricket-team-coach

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் நாளை நடக்கிறது. மும்பையில் நடக்கும் இந்த நேர்காணலில் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு விலகினார். கேப்டன் விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பயிற்சியாளர் பதவிக்கு வீரேந்தர் ஷேவாக், டோம் மூடி, ரவிசாஸ்திரி, சிம்மன்ஸ், லேன்ஸ் குளூஸ்னர் உட்பட பலர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்காணல் மும்பையில் நாளை காலை நடக்கிறது. சச்சின் தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகிய 3 பேர் அடங்கிய குழு நேர்காணல் நடத்துகிறது. தற்போது லண்டனில் உள்ள சச்சின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணலில் பங்கேற்பாராம்.


Advertisement

Advertisement
[X] Close