Published : 25,Oct 2020 08:48 PM
“என் வீட்டைத்தான் உடைக்கலாம்; என் உத்வேகத்தை அல்ல” - சஞ்சய் ராவத்தை சீண்டும் கங்கனா ரணாவத்

என் வீட்டை உடைக்கலாம். ஆனால் எனது உத்வேகத்தை அல்ல என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் - கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடைபெற்றது.
இதையடுத்து விதிமீறல் இருப்பதாக கூறி சிவசேனா அரசு மும்பையில் இருந்த கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டின் ஒரு பகுதியை இடித்தது. இதை எதிர்த்து கங்கனா ரணாவத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இடிக்கப்பட்ட பங்களாவிற்காக 2 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.
My broken dream smiling in your face Sanjay Raut, Pappu sena could break my house but not my spirit, Banglow number 5 is celebrating the triumph of good over evil today #HappyDussehrapic.twitter.com/2i4OnxiPeS
— Kangana Ranaut (@KanganaTeam) October 25, 2020
இந்நிலையில் கங்கனா ரனாவத் மீண்டும் சஞ்சய் ராவத்தை சீண்டியுள்ளார். அதாவது கங்கனா ரணாவத் தனது டிவிட்டர் பக்கத்தில், இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஒன்று தனது வீட்டின் 5வது கேட், மற்றொன்று அனுமான் சிலை புகைப்படங்கள் உள்ளது.
மேலும் அந்த பதிவில், ‘’ பப்பு சேனா என் வீட்டை உடைக்கலாம். ஆனால் எனது உத்வேகத்தை அல்ல. பங்களா எண் 5 வெற்றியை இன்று கொண்டாடுகிறது. ஹேப்பி தசரா” எனத் தெரிவித்துள்ளார்.