சென்னை அணிக்கு வெற்றியை கொடுப்பதே எனக்கு முக்கியமானதாக தோன்றியது என்று ஆட்டநாயகன் விருது பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் அணியுடனான இன்றையப் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை எடுத்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. அப்போது உற்சாகமாக பேசினார் ருதுராஜ்.
அதில் "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக முக்கியமாக அணிக்கு வெற்றி தேடி தருவதே என்னுடைய எண்ணமாக இருந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அமீரகம் வந்தபோது நான் மட்டுமே கொரோனா காரணமாக அதிகமான நாள்கள் தனிமையில் இருந்தது. அது மிகவும் கடினமான நாட்கள்" என்றார் ருதுராஜ்.
மேலும் பேசிய அவர் "அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். நிச்சயம் ஏதோ ஒரு ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடுவேன் என நினைத்திருந்தேன். அது இன்று நடந்தது. பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. ஆனால் சரியான கேப்புகளில் என்னால் பவுண்டரிகளை அடிக்க முடிந்தது. அதேபோல எந்த பவுலரை விளாச வேண்டும் விளாசக் கூடாது என கவனமாக இருந்தது" என்றார் ருதுராஜ் கெய்க்வாட்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!