அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை முன்னாள் காதலன் கொலை செய்து பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயது செலினா ஆன் பிராட்லியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான செலினா தற்போது மூன்றாவது குழந்தைக்கு விரைவில் தாயாகவிருக்கிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணாமல் போனதால் குடும்பத்தினர் புகார் அளித்து காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கள் கிழமை செலினாவின் முன்னாள் காதலனின் வீட்டில் தேடியபோது, செலினா கழுத்து மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் சமையலறையில் இருந்த பிரிட்ஜில் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்படிருந்தார்.
அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரது முன்னாள் காதலன் வில்லியம் ஜேம்ஸை செவ்வாய் கிழமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுவரை செலினா கொலைக்கான காரணம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!