Published : 19,Oct 2020 06:06 PM

தமிழகத்தில் அரசியல் பண்பாடு தழைக்கிறதா?: என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

Edappadi-palanisamy---Stalin-meet-a-new-political-culture-flourishing-in-Tamilnadu

அரசியல் களத்தில் அதிமுக ஆட்சி பற்றி அனல்பறக்கும் விமர்சனங்களை முன்வைக்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அவரது வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் புதிய பண்பாடு தழைப்பதற்கான முதல் விதையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள். இதுபற்றி சில அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

image

மணா, மூத்த பத்திரிகையாளர் 

அரசியல் கட்சியினர் கொள்கை வேறுபாடுகள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு சந்திப்பது இயல்பான விஷயம்தான். அதை அரசியல் கண்கொண்டு பார்க்கமுடியாது. இராஜாஜிக்கும் பெரியாருக்கும் இருந்த நட்பு பெருமைக்குரியதாக இருந்தது. கொள்கைகளில் வேறுபட்ட திசைகளில் பயணித்த இருவரும் தனிப்பட்ட முறையில், நெருக்கமான விஷயங்களைப் பகிரக்கூடிய அளவுக்கு பேரன்புடன் இருந்தனர்.

தன் திருமணம் பற்றிக்கூட இராஜாஜியிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். பெரியார் மறைவுக்கு அரசியல் வேறுபாடற்று தமிழகத் தலைவர்கள் திரண்டிருந்த புகைப்படம் இன்றும் இணையதளத்தில் பிரபலமாக உள்ளது. எம்ஜிஆரும் கருணாநிதியும் அப்படித்தான் நட்புடன் இருந்தார்கள். விழாக்களில் சந்தித்தார்கள். ஜெயலலிதா கொஞ்சம் விதிவிலக்காக இருந்தார். ஒரு பேட்டியில்கூட அவர், "விழாக்களில் பொது இடங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பதில் நான் எப்பவும் தயாராகவே இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

image

மணா, பத்திரிகையாளர் 

திருமண விழாக்களில்கூட திமுக, அதிமுக தலைவர்கள் தனித்தனியாக வந்துபோகும் நிலையே இருந்தது. கருணாநிதி உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது அதிமுக தலைவர்கள் சென்று நலம் விசாரித்தார்கள். எம். ஜி. ஆர் மறைந்த நாளன்று, அதிகாலையிலேயே ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று பார்த்து வந்திருக்கிறார் கருணாநிதி. அன்றைய நாள் முழுவதும் அவர் கடுமையான துயரத்தில் இருந்ததாக அவரது உதவியாளர் சண்முகநாதன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அரசியலைக் கடந்து தலைவர்கள் சந்திப்பதை நாம் ஆரோக்கியமானதாக பார்க்கவேண்டும்.

image

துரை கருணா, அரசியல் விமர்சகர்

தமிழக அரசியலில் 70 - 80 களுக்குப் பிறகு திமுக, அதிமுக இடையே இருதுருவ அரசியல்தான் இருந்தது. விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அரசியல் தலைவர்கள் சந்தித்துக்கொள்வது இயல்பாக நடந்துவந்தது. அதிமுகவில் ஜெயலலிதா தலைமைக்கு வந்த பிறகு நிலைமை சற்று மாறியது.

image

காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் மகனுக்கும் தம்பித்துரை மகளுக்கும் நடந்த திருமணத்தில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை. ஒரு காலக்கட்டத்தில் திமுகவினர் வீட்டு விழாக்களில் அதிமுக பொறுப்பாளர்கள் தென்பட்டால் போதும், பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டனர். தி.நகரில் பழைய கட்சிக்காரர் ஆறுமுகத்தின் மகன் ஏ. பழனி. வட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது திருமணத்தில் திமுகவின் ஜெ. அன்பழகன் கலந்துகொண்டார். அந்தப் படத்தை கட்சிக்காரர்கள் அனுப்ப, கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் பழனி.

சீனாவின் எல்லைக்குள் ஜம்மு - காஷ்மீர்.. சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்..!

image

நாவலர் நெடுஞ்செழியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற கருணாநிதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பி அனுப்பிய நிகழ்வும் நடந்திருக்கிறது. திமுகவில் இருந்த தாமரைக்கனி மறைந்தபோது, அவரது இறுதிச்சடங்குக்குச் செல்லாமல் அரசு விழாவில் இருந்தார் இன்பத்தமிழன். உடனே அவரை ஊருக்குச் சென்று தந்தைக்கு மரியாதை செலுத்தச் சொன்னார் ஜெயலலிதா.

image

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் திமுகவினரும் அதிமுகவினரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்வது இயல்பாக நடந்ததுவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று, அவரது தாயின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்து வந்திருக்கிறார் ஸ்டாலின். இதுவொரு ஆரோக்கியமான அரசியலுக்கான அடித்தளம். இந்த அரசியல் பண்பாடு தொடரவேண்டும்.

"800 படத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்": முத்தையா முரளிதரன்

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: தமிழகத்தில் அதிகரித்த வெங்காயம் விலை.!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்