[X] Close

முதல்வர் பழனிசாமியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாடு

mk-stalin-will-meet-chief-minister-edappadi-palanisamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரின் தாயார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிகாரிகள், உறவினர்கள், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறினர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்.. |  Tamil Yugam


Advertisement

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று முதலமைச்சர் பழனிசாமியை கிரீன்வேஸ் இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close