பீகாரின் பக்ஸார் பகுதியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தனது ஐந்து வயது மகனுடன் ஆற்றில் வீசப்பட்ட கொடூர நிகழ்வு நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தின் பக்ஸார் பகுதியிலுள்ள ஓஜா பரான் கிராமத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தனது ஐந்து வயது குழந்தையுடன் சேர்ந்து ஆற்றில் வீசப்பட்டார். இந்த கொடூர நிகழ்வில் குழந்தை ஆற்றில் மூழ்கி இறந்தது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய பீகார் காவல்துறை, அந்த பெண்ணிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த வழக்கு தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தையுடன் வங்கிக்குச் செல்லும் வழியில் சில ஆண்கள் அவர்களை சூழ்ந்து கடத்திசென்றதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார். அவர்கள் எங்களை ஆற்றில் தள்ளியபிறகு சத்தம் போட்டதாகவும், ஆனால் உள்ளூர்வாசிகள் வந்து மீட்பதற்குள் குழந்தை இறந்துவிட்டது என்றும் அந்த பெண் கூறினார். சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!