Published : 10,Oct 2020 10:52 AM

திருப்பதி கோயிலில் வழிபாடு செய்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்.!

OPS-at-Tirupati-Temple

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்து வருகிறார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று தர்ம யுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் மீண்டும் கட்சியில் இணைந்து துணை முதல்வரானார்.

image

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ என்ற போட்டி நிலவிவந்த நிலையில்,  அக்டோபர் 7 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில்,  திருப்பதி கோயிலில் இன்று, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் எம்.சி சம்பத், எஸ்.பி வேலுமணி, வி.சரோஜா ஆகியோர் வழிபாடு நடத்தினர்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்