12 வகுப்பு மாணவன் ஒருவனை நான்கு 10 வகுப்பு மாணவர்கள் காரில் கடத்தி சட்டையை கழற்றச்சொல்லி அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை நான்கு 10ஆம் வகுப்பு மாணவர்கள் காரில் வனப்பகுதிக்கு கடத்தி சென்று, சட்டையை கழற்றச் சொல்லி தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்கள்.
செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அன்று மதியம் 1 மணியளவில், அந்த 12ஆம் வகுப்பு மாணவன் காரில் தனது இரு நண்பர்களுடன் தனது பள்ளியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை சந்திக்கச் சென்றிருந்தான். அந்த சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அதேப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் அவரை பிடித்து கோவிந்தபுரம் வனப்பகுதிக்கு கடத்தி சென்றனர்.
பின்னர் அந்த மாணவனின் வாயில் துணியை வைத்து அடைத்து, அவனின் மொபைலில் உள்ள சமூக ஊடக கணக்குகளை டீஆக்டிவேட் செய்தனர். சில புகைப்படங்களையும் அவர்களின் போனுக்கு மாற்றினார் என்று சிறுவன் குற்றம் சாட்டினான். பின்னர் அவனின் சட்டையை கழற்றசொல்லிவிட்டு குச்சி மற்றும் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்தனர் என்று அம்மாணவன் குற்றம் சாட்டினான்.
இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது என்று போலீஸ் அதிகாரி கூறினார். மாணவியுடன் பேசியதற்காக இந்த தாக்குதல் நடந்திருக்குமோ என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸ் அதிகாரி கூறினார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!