Published : 28,Sep 2020 11:32 PM
கடைசிவரை உச்சக்கட்ட பரபரப்பு.. சூப்பர் ஓவருக்கு சென்ற RCB VS MI ஆட்டம்..!

துபாயில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவர் செல்கின்றது.
டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த பெங்களூரு மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. பெரிய இலக்கை சேஸ் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ரன் சேர்க்க தவறிய நிலையில் இஷான் கிஷனும், பொல்லார்டும் கடைசி வரை வெற்றிக்காக பேட்டின் துணையோடு பெங்களூருவின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடினர்.
இறுதியில் 201 ரன்களை குவித்து போட்டியை சமனில் முடித்தது மும்பை.
போட்டியின் முடிவு சூப்பர் ஓவர் மூலம் முடிவு செய்யப்பட உள்ளது.