[X] Close

‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

IPL-2020-SRH-VS-KKR-Top-10-Moments-of-the-match-8

அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நிகழ்ந்த முக்கியமான 10 தருணங்களை இனி பார்க்கலாம்.


Advertisement

image
1. டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்த வார்னர்
நடப்பு ஐபிஎல் சீஸனில் இந்த ஆட்டத்திற்கு முன்னர் வரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் டாஸ் வென்ற அணியின் கேப்டன்கள் பவுலிங்கை தான் தேர்வு செய்தனர்.
டி20 ஆட்டங்களில் டார்கெட்டை சேஸ் செய்வது எளிது என்பதால் கேப்டன்கள் இந்த வழக்கத்தை கடைபிடித்திருக்கலாம்.
ஆனால், டாஸ் இந்த சீஸனில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்ற பேச்சு எழுந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்றதும் தில்லாக பேட்டிங் தேர்வு செய்தார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.

image
2. கம்மின்ஸ் VS பேர்ஸ்டோவ்


Advertisement

இந்த சீசனில் கொல்கத்தாவுக்காக விளையாட அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் பேட் கம்மின்ஸ். ஆனால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சரியான லைனிலும், லெந்திலும் பந்து வீச தவறியதால் அதிக ரன்களை லீக் செய்து ஏமாற்றினார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு அவர் மீது விமர்சனங்கள் எழ, இன்றைய ஆட்டத்தின் மூலம் அதற்கு பதில் கொடுத்துள்ளார் கம்மின்ஸ்.
கிரிக்கெட் உலகின் மோஸ்ட் டேஞ்சரஸ் ஒப்பனர்களான டேவிட வார்னர், ஜானி பேர்ஸ்டோ இணையர்களை தனது பந்துவீச்சின் மூலம் அடக்கி ஆண்டார் கம்மின்ஸ். ஒருகட்டத்தில் அவரது பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் க்ளீன் போல்டாகி வெளியேறினார் பேர்ஸ்டோவ்.
நான்கு ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 11 டாட் பால்களை வீசியிருந்தார் கம்மின்ஸ்.

image
3.வார்னர் VS வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தாவுக்காக இந்த சீசனில் விளையாடி வரும் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்து வீசி அசத்தினார். ஆட்டத்தின் மிடில் ஓவரில் பொறுப்போடு பந்து வீசிய அவர், அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மிதமான வேகத்தில் பந்துவீசி வேரியேஷன் கொடுத்தவர் வார்னரை காட் அண்ட் பவுல் முறையில் காலி செய்தார். அது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
அந்த விக்கெட்டை வருண் வீழ்த்தாமல் போயிருந்தால் ஹைதராபாத் அணி கூடுதலாக இருபது முதல் முப்பது ரன்கள் வரை எடுத்திருக்கும்.


Advertisement

image
4. நம்பிக்கை கொடுத்த மணீஷ் பாண்டே

ஹைதராபாத் அணியின் பேட்டிங் நம்பிக்கையே டாப் மூன்று பேட்ஸ்மேன்கள் தான். வார்னர், பேர்ஸ்டோ மற்றும் மணீஷ் பாண்டே தான். இதில் பேர்ஸ்டோவ் ஏமாற்றம் கொடுக்க வார்னர் முடிந்தவரை போராடி பார்த்தார். இருந்தும் ஹைதராபாத்துக்கு ஆறுதல் கொடுத்தது மணீஷ் பாண்டேவின் ஆட்டம் தான்.
38 பந்துகளில் 51 ரன்களை குவித்து அவுட்டானார் பாண்டே. அதற்கடுத்ததாக களம் இறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடியது குறைவான டார்கெட்டை செட் செய்ய காரணமாக அமைந்துவிட்டது.

image
5.சூப்பராக பந்து வீசிய கொல்கத்தா பவுலர்கள்

கொல்கத்தாவின் பவுலிங் யூனிட் இந்த ஆட்டத்தில் அற்புதமாக செயல்பட்டது. நரைன், கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோட்டி, ரஸல் என பந்து வீச ஏழு பவுலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியிருந்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக்.
மொத்தமாக 40 டாட் பால்களை வீசி ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை ரன் குவிப்பில் ஈடுபட விடாமல் தடுத்திருந்தனர் கொல்கத்தா பவுலர்கள்.
பவர்பிளேயில் 40 ரன்கள், 7 முதல் 15 ஓவர்களில் 59 ரன்கள் மற்றும் கடைசி ஐந்து ஓவர்களில் 43 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தனர் கொல்கத்தா பவுலர்கள்.
இருபது ஓவர் முடிவில் வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஹைதராபாத்.

image
6. சுனில் நரைன் : தொடரும் ஷார்ட் பால் சோகம்

சுலபமான இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே சருக்கலாக அமைந்தது.
பரிசோதனை முயற்சியாக பவர்பிளேயில் அடித்து ஆடும் வல்லமை கொண்ட சுனில் நரைனுக்கும் ஷார்ட் பாலுக்கும் ஏழரை பொருத்தம் என சொல்லலாம். கடந்த சில இன்னிங்ஸ்களில் நரைனின் விக்கெட்டை ஷார்ட் பால் வீசியே தூக்கியுள்ளனர் எதிரணி பவுலர்கள். இந்த ஆட்டத்திலும் ஹைதராபாத் அணி பவுலர்கள் நரைனுக்கு ஷார்ட் பால் போட ரன் எதுவும் சேர்க்காமல் டக் அவுட்டாகி வெளியேறியிருந்தார் நரைன்.

image
7. ரிவியூவை வீணடித்த தினேஷ் கார்த்திக்

ஆட்டத்தின் ஏழாவது ஓவரை ரஷீத் கான் வீசியிருந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்டு விளையாடினார் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக். குட் லெந்தில் 87.6 கிலோ மீட்டர் வேகத்தில் ரஷீத் வீசிய பந்தை தினேஷ் கார்த்திக் கம்ப்ளீட்டாக மிஸ் செய்ய LBW டிஸ்மிஸல் முறையில் அவுட் கொடுத்தார் அம்பையர்.
நீண்ட யோசனைக்கு பிறகு ரிவியூ செய்தார் தினேஷ் கார்த்திக். ஆனால் அதிலும் அவுட் கொடுக்கப்பட்டதால் ரன் எதுவும் சேர்க்காமல் வெளியேறினார்.

image

8. சாலிடாக ஆடிய சுப்மன் கில்

சுலபமான இலக்கை விரட்டிய போதும் கொல்கத்தாவின் பேட்ஸ்மேன்கள் நரைன், நித்திஷ் ராணா, தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளிக்க இளம் வீரர் சுப்மன் கில் நிதானமாக ஆடி 62 பந்துகளில் 70 ரன்களை சேர்த்து ஆடுகளத்தில் நங்கூரம் போட்டு நிதானமாக ஆடி கொல்கத்தாவை வெற்றி பெற செய்தார். அவருக்கு இயன் மோர்கன் கம்பெனி கொடுத்து 29 பந்துகளில் 42 ரன்களை குவித்திருந்தார்.

image
9. பவுலிங்கில் சொதப்பிய ஹைதராபாத்

ஐபிஎல் ஆட்டங்களில் டாப் கிளாஸ் பவுலிங் ஃபர்பாமென்ஸை கொடுக்கின்ற அணிகளில் ஹைதராபாத் அணியும் ஒன்று. புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், முகமது நபி என டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் ஹைதரபாத் அணிக்காக இன்றைய ஆட்டத்தில் விளையாடியும் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டனர். கடந்த சீசனில் 150 ரன்களுக்கும் குறைவான டார்கெட்டில் எதிரணியை வீழ்த்திய சாதனைகளை ஹைதராபாத் அணி படைத்துள்ளது.
அதிலும் புவனேஸ்வர் குமார் மூன்று ஓவர்களில் 29 ரன்களை லீக் செய்திருந்தார்.

image
10. கேப்டன்சியில் அசத்திய தினேஷ் கார்த்திக்

பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த டி20 போட்டிகளில் ஏழு பவுலர்களை பிக் செய்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்.
கொல்கத்தா அணி டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பந்துவீச்சை தான் தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும். அதனால் கொல்கத்தாவுக்கு ‘இட்ஸ் எ குட் டாஸ் டு லூஸ்’.
ஒவ்வொரு பவுலரையும் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என தெளிவாக ஸ்கெட்ச் போட்டதோடு அதை அப்ளையும் செய்து ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி இருந்தார்.
“ஏழு பவுலர்களில் மூன்று பேர் ஆல் ரவுண்டர்களாக இருப்பது எனது அதிர்ஷ்டம். அதனால் எனக்கு அவர்களது உதவி எங்கு தேவைப்படுகிறதோ அவர்களை அந்த இடத்தில் என்னால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது” என கேப்டன் தினேஷ் கார்த்திக் போட்டி முடிந்த பிறகு சொல்லியிருந்தார்.


Advertisement

Advertisement
[X] Close