Published : 05,Jul 2017 02:48 AM
நிவின்பாலிக்கு ஜோடியாகும் த்ரிஷா

நடிகை த்ரிஷா HEY JUDE என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா 34 வயதாகியும், இன்றும் இளம்பெண்ணை போலவே காட்சியளிக்கிறார். இவர் தற்போது மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலிக்கு இணையாக, கிறிஸ்தவ பெண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து, கோவாவில் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கடந்த 14 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.