தமிழ் சினிமாவில் புதுமையான இயக்கத்திற்காகப் பேசப்படும் இயக்குநர் மிஷ்கின், அவ்வப்போது சொந்தப் படங்களில் முகம் காட்டுவது வழக்கம். அண்மையில் அவர் இயக்கி உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடித்த சைக்கோ படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. தற்போது ஜி.வி. பிரகாஷின் பேச்சிலர் படத்தில் கெளரவத் தோற்றத்தில் மிஷ்கின் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்த படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப் பிடிக்க உத்தரவு போன்றவை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. சதீஷ் செல்வகுமார் இயக்கும் பேச்சிலர் படத்திற்கான படப்படிப்பு, ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்புகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடிக்கிறார். படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் ஒன்றை சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில், மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சிம்புவும் அருண் விஜய்யும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படம் வடிவேலுவுக்கு ரீஎண்ட்ரியாக இருக்கும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?