[X] Close

நாயை பாலத்திலிருந்து ஆற்றுக்குள் வீசிய குரூர நபர் - வழக்குப்பதிவு செய்த போலீசார்.!

வைரல் வீடியோ

Man-throws-dog-into-Bhopal-lake--video-goes-viral--probe-on
பாலத்திலிருந்து ஆற்றுக்குள் நாயை வீசி வீடியோ எடுத்த குரூர நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
போபால் அருகே படா தலாப் என்னுமிடத்தில் ஆற்றுப்பாலம் ஒன்றில் இரண்டு நாய்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இளைஞர்களில் ஒருவர், ஒரு நாயை அலேக்காக தூக்கி பாலத்திலிருந்து ஆற்றுக்குள்  வீசி எறிந்தார். எறிந்ததும் குற்றவுணர்வே இல்லாமல் சிரித்துக்கொண்டனர்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத்தொடர்ந்து நாயை வீசிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போபால் போலீசார், அந்நபர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

Advertisement

Advertisement
[X] Close