அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம். தற்கொலை என்பது தீர்வுமல்ல என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்
நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜோதி ஸ்ரீ துர்கா, தான் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணவியின் தற்கொலை குறித்து தங்களது இரங்கலையும், தற்கொலை தீர்வல்ல என்ற கருத்தினையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பதிவில் “ஓ! மாணவ மகன்களே! மகள்களே! நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல. பிறக்கும் யாருக்கும் தங்களை அழிக்கும் உரிமை இல்லை. அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம். நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்
ஓ!
மாணவ மகன்களே! மகள்களே!
நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.
பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.
அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.
நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.
நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.#NEET #BanNEET — வைரமுத்து (@Vairamuthu) September 12, 2020
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!