Published : 27,Aug 2020 10:40 AM

ஆந்திரா: 3 தலைநகரங்களுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை-உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு

SC-refuses-to-interfere-with-HC-order-on-3-Andhra-Pradesh-capitals

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து தீர்ப்பளித்தது அந்த தீர்ப்பை எதிர்த்து ஆந்திர மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

image

ஆந்திராவில் அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய இடங்களில் மூன்று தலைநகரங்களை உருவாக்குவது தொடர்பான மூன்று சட்டங்களை அம்மாநில அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும், தனிநபர்களும் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பான வழக்கு முடிவுக்கு வரும்வரை மூன்று தலைநகரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளை நிறுத்திவைத்து இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். மேலும் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்