[X] Close

ஜிஎஸ்டி விழா: புறக்கணிக்க காங்., திமுக முடிவு

Congress-and-DMK-to-override-GST-meet

நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிப்பதாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோன்று விழாவை புறக்கணிப்பதாக திமுகவும் அறிவித்துள்ளது.
 
ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்துவதற்கான அறிமுக விழா நாளை இரவு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி அறிமுக விழாவை புறக்கணிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியிலுள்ள திமுகவும், ஜிஎஸ்டி அறிமுக விழா கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுக கூட்டம், மத்திய பாரதிய ஜனதா அரசின் வெற்று விளம்பரம் என திமுக எம்.பியும் செய்தித்தொடர்பாளருமான டிகேஎஸ்இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவசர கதியில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதாக கூறி விழாவை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி, நாளை நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வர உள்ள சூழலில், அதற்கான அறிமுக விழாவை புறக்கணிக்க முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருக்கின்றன. 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close