[X] Close

தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்!

மாவட்டம்

Police-detained-and-confiscated-those-who-tried-to-place-the-Ganesha-statue

தென்காசி அருகே தடையை மீறி விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி சிலையை பறிமுதல் செய்தனர். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் அவற்றைக் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், அரசின் தடையை மீறி, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று, தடையை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.


Advertisement

இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோஷமிட்டனர். செங்கோட்டையில் தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close