Published : 28,Jun 2017 05:02 PM

திருமண நிகழ்ச்சியில் தனித்தனியே பங்கேற்ற முதல்வர், டிடிவி தினகரன்

TTV-Dhinakaran-attends-function-with-TN-CM

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் பங்கேற்றனர். 

சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இருவரும் தனித்தனியே கலந்துகொண்டனர். டிடிவி தினகரன் கலந்துகொண்டு சென்ற பின்னரே நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், யாருடனும் கருத்து வேறுபாடுகள் இல்லை என்றும், ஆகஸ்ட் 5ம் தேதிக்குப் பின்னர் தனது செயல்பாடுகள் குறித்து தெரியவரும் என்று தெரிவித்தார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்