Published : 18,Aug 2020 07:38 AM
குடியரசுத் தலைவர் ஒப்புதல்: பெயர் மாறிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்!!

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரை, மத்திய கல்வித்துறை அமைச்சகமாக பெயர் மாற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர், மத்திய கல்வித்துறை அமைச்சகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகம் என அரசின் இணையதளத்திலும் பெயர் மாற்றப்பட்டது. இனி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும், கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்படுவர்.