Published : 28,Jun 2017 11:11 AM

அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தெலங்கானா வீராங்கனை

Telangana-woman-Sindhuja-Reddy-selected-for-US-cricket-team

தெலங்கானாவைச் சேர்ந்த சிந்துஜா ரெட்டி எனும் வீராங்கனை அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

19 வயதுக்குட்பட்டோருக்கான தெலங்கானா பெண்கள் அணிக்கு தலைமை வகித்த சிந்துஜா ரெட்டி, திருமணத்துக்குப் பின்னர், அமெரிக்காவில் குடியேறினார். திருமணத்துக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதைக் குறைத்துக் கொண்டிருந்த அவர், அமெரிக்கா சென்ற பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்கேற்கத் தொடங்கினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமனான சிந்துஜாவின் திறமையைக் கண்டுகொண்ட அமெரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம், 2020ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்தனர். ஸ்காட்லாந்தில் வரும் ஆகஸ்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் சிந்துஜா கலந்துகொள்வார் என்று தெரிகிறது. பொறியியல் பட்டதாரியான சிந்துஜா, அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்