இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மிகமுக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
38 வயதான அவர் இங்கிலாந்துக்காக கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இதுவரை 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 590 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த சில நாட்களில் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார்.
இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற உள்ளதாக பேசப்பட்டு வந்தது. ‘அது வெறும் வதந்தி’ என ‘கிரிக்கெட்டின் பைபிள்’ என சொல்லப்படும் விஸ்டன் பத்திரிகை உடனான பேட்டியில் தனது ஒய்வு குறித்து மறுத்துள்ளார் ஆண்டர்சன்.
‘தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த வாரம் வெறுமையாக அமைந்துவிட்டது. நான் நன்றாக பந்து வீசாதது தான் காரணம். அநேகமாக பத்து ஆண்டுகளில் முதல்முறையாக, களத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதாக கருதுகிறேன்.
அடுத்து வரும் நாட்களில் கடமையாக உழைத்து இழந்த பார்மை மீட்டெடுப்பேன். கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்னிடம் தெம்பு இருக்கிறது என்பதை எனது ஆட்டத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்துவேன்’ எனவும் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக காயத்தினால் ஆண்டர்சன் அவதிப்பட்டு வருகிறார் எனதும் குறிப்பிடத்தக்கது
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!