குடி போதையில் தகராறு செய்த கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மன்னாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (44), விவசாயி. இவருக்கு தனலட்சுமி (34) என்ற மனைவியும், புவனேஸ்வரி (18) என்ற மகள், கணபதி(13), வசந்தகுமார் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். புவனேஸ்வரிக்கு திருமணம் ஆகி விட்டது. மகன்கள், பள்ளியில் படித்து வருகின்றனர்.
முருகேசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது மனைவியை அடித்து உதைத்து தகராறு செய்வாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல குடித்துவிட்டு முருகேசன் வீட்டுக்கு வந்தார். அவருக்கும், தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. மனைவி மற்றும் மகன்களை அடித்துள்ளார். இதையடுத்து கணவரை தீர்த்து கட்ட நினைத்த தனலட்சுமி, அவர் தூங்கும் வரை காத்திருந்தார். நள்ளிரவில், தூங்கி கொண்டு இருந்த கணவரின் கை, கால்களை கட்டினார். பின்னர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினார். இதில் முருகேசன் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அதிகாலையில் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி சரண் அடைந்தார். போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!